இலங்கை அணியுடனான முதல் போட்டியில் விளையாடும் இந்திய அணி இதுதானா?

viratkohli rohitsharma INDvSL mohalitest
By Petchi Avudaiappan Mar 03, 2022 07:39 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

இந்தியா- இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று நடக்கவுள்ள நிலையில் இப்போட்டிக்காக உத்தேச வீரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. 

இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதில் முதல் நடந்த டி20 தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.

இதனைத் தொடர்ந்து முதல் டெஸ்ட் போட்டி மொகாலியில் இன்று தொடங்கவுள்ளது. இப்போட்டி முன்னாள் கேப்டன் விராட் கோலியின் 100வது போட்டி என்பதால் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் இதனை எதிர்நோக்கி  காத்திருக்கிறது. 

இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணியில் தொடர்ந்து சொதப்பி வந்த புஜாரா, ரஹானே, புவனேஷ்வர் குமார் போன்ற வீரர்கள் நீக்கப்பட்டதால் இளம் வீரர்கள் நிறைய பேருக்கு வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. 

அந்த வகையில் ரோகித் சர்மா, மாயன்க் அகர்வால், விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர், ரிஷப் பண்ட், ஹனுமா விஹாரி, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திர அஸ்வின், ஜஸ்ப்ரிட் பும்ராஹ், முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகியோர் அணியில் இடம் பெற வாய்ப்புள்ளதாக உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது.