நியூசிலாந்துடன் மோதும் இந்திய அணி - ஆடும் லெவனில் இடம் பெறும் வீரர்கள் இவர்கள் தான்...!
டி20 உலகக்கோப்பையில் நியூசிலாந்து அணிக்கெதிராக விளையாடவுள்ள இந்திய அணி வீரர்களின் உத்தேசப் பட்டியல் வெளியாகியுள்ளது.
நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுடனான தோல்விக்குப் பிறகு இந்திய அணி தனது 2வது ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை இன்று எதிர்கொள்கிறது. கிட்டத்தட்ட வாழ்வா சாவா போட்டியாக பார்க்கப்படும் இந்த போட்டிக்காக இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே இந்த போட்டியில் களமிறங்கவுள்ள வீரர்களின் தேர்வு குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் ஆலோசனை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நியூசிலாந்து அணிக்கெதிராக விளையாடவுள்ள இந்திய அணி வீரர்களின் உத்தேசப் பட்டியல் வெளியாகியுள்ளது.
இந்த போட்டிக்கான இந்திய அணியை பொறுத்தவரையில் பெரிதாக மாற்றங்கள் எதுவும் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது பாகிஸ்தானுக்கெதிராக களம் கண்ட வீரர்களே மீண்டும் ஆடுவார்கள் என கூறப்படுகிறது.
ஆனால் ஹர்திக் பாண்டியா காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்துவிட்டதால் அடுத்த போட்டியிலும் அவர் விளையாடுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே வேளையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய விராட் கோலி ஷர்துல் தாகூரும் தங்களது திட்டத்தில் உள்ளார் என தெரிவித்துள்ளார். இதனால் இந்த ஒரு மாற்றம் கணிக்க முடியாத ஒன்றாக உள்ளது.
நியூசிலாந்து போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பட்டியல்;
கே.எல் ராகுல், ரோஹித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா/ஷர்துல் தாகூர், முகமது ஷமி, ஜஸ்ப்ரிட் பும்ராஹ், புவனேஷ்வர் குமார், வருண் சக்கரவர்த்தி.

Super Singer: பாடிக் கொண்டிருக்கும் போதே நடுவர்கள் கொடுத்த சர்ப்ரைஸ்! ஃபைனலிஸ்ட்டாக சென்றவர் யார்? Manithan
