அந்த பையனுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு : தமிழக வீரரை பாராட்டிய ரவி சாஸ்திரி
இந்திய அணியின் ஆல் ரவுண்டர்களில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தருக்கு சிறப்பான எதிர்காலம் உள்ளதாக முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
ரவிசாஸ்திரி வாஷிங்டன் சுந்தர் குறித்து கூறுகையில் :
ஐபிஎல் போட்டிகளில் ஐதராபாத் அணிக்காக சிறப்பான பங்களிப்பை வழங்கும் இவர் பவர் பிளேவில் சிறப்பாக பந்துவீசி ரன்களை கட்டுப்படுத்தி தற்போது சிறந்த அதே போல் பேட்டிங்கிலும் சிறப்பாக ஆட்டத்தை முடிக்கும் திறன் கொண்டவர்.
22 வயதாகும் இவருக்கு இந்திய அணியில் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது. இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வாஷிங்டன் சுந்தருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
மேலும், வாஷிங்டன் சுந்தர் எல்லா வடிவங்களிலும் முதன்மையான ஆல்ரவுண்டர். என்னை பொறுத்தவரை அவர் ஒரு தீவிர கிரிக்கெட் வீரர். அவர் மிகவும் இளமையாக இருக்கிறார்.
சுந்தர் மேலும் தனது விளையாட்டைப் புரிந்து கொள்ள வேண்டும், அவரது ஷாட் தேர்வு சிறப்பாக உள்ளது. காயம் ஏற்படாத வகையில் அவர் தனது உடற்தகுதிக்கு உழைக்க வேண்டும். இந்தியாவுக்கு ஒரு தீவிர கிரிக்கெட் வீரர் கிடைத்துள்ளார்" என சாஸ்திரி தெரிவித்துள்ளார்.