இந்திய தலைவர்கள் வழங்கிய விலையுயர்ந்த பரிசுகள்! பட்டியலை வெளியிட்ட அமெரிக்க அரசு

Narendra Modi United States of America India
By Vinoja Jan 31, 2026 08:57 AM GMT
Report

பிரதமர் நரேந்திர மோடி உட்பட ஏனைய இந்தியத் தலைவர்கள், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோ பைடன் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளுக்கு வழங்கிய விலையுயர்ந்த பரிசுகள் குறித்த விவரங்களை அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

பரிசு பட்டியல்

பிரதமர் மோடி, முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு வழங்கிய பரிசுகளில் மிகவும் விலையுயர்ந்தது ரூ.6.5 லட்சம் மதிப்பிலான 'ஸ்டெர்லிங் சில்வர்' ரெயில் சிலை ஆகும். குறிதத்த சிலை 2024 ஜூலை மாதம் வழங்கப்பட்டது.

இந்திய தலைவர்கள் வழங்கிய விலையுயர்ந்த பரிசுகள்! பட்டியலை வெளியிட்ட அமெரிக்க அரசு | Indias Gifts To Us Leaders State Releases The List

2023-ல் ஜோ பைடனுக்கு வழங்கப்பட்ட பரிசுகளில் ஒரு பிரத்யேகமான சந்தனக் மரப் பெட்டி, கைவேலைப்பாடுகள் கொண்ட ஒரு வெள்ளி விளக்கு மற்றும் வெள்ளி விநாயகர் சிலை ஆகியவை காணப்பட்டன. 

அமெரிக்காவின் முன்னாள் முதல் பெண்மணி ஜில் பைடனுக்கு, சுமார் ரூ.2.5 லட்சம் மதிப்பிலான விலையுயர்ந்த காஷ்மீர் பஷ்மினா சால்வையை மோடி பரிசாக வழங்கியுள்ளார்.

இந்திய தலைவர்கள் வழங்கிய விலையுயர்ந்த பரிசுகள்! பட்டியலை வெளியிட்ட அமெரிக்க அரசு | Indias Gifts To Us Leaders State Releases The List

2022-ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க பாதுகாப்பு அமைச்சா் லாய்ட் ஆஸ்டினுக்கு இந்திய பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் வெண்கல நடராஜா் சிலையை பரிசளித்தாா். அதன் மதிப்பு 3,700  டாலா் (சுமாா் ரூ.3.40 லட்சம்) ஆகும்.

மேலும் முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரிஸிற்கு, ரூ.1.11 லட்சம் மதிப்பிலான 'கிருஷ்ண ராசலீலா வெள்ளிப் பெட்டி' வழங்கப்பட்டுள்ளது. அவரது கணவர் டக்ளஸ் எம்ஹாப்பிற்கு ரூ.49,000 மதிப்பிலான உடையில் அணியும் கஃப்லிங்க்ஸ் பரிசளிக்கப்பட்டது.

இந்திய தலைவர்கள் வழங்கிய விலையுயர்ந்த பரிசுகள்! பட்டியலை வெளியிட்ட அமெரிக்க அரசு | Indias Gifts To Us Leaders State Releases The List

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவனுக்கு காஷ்மீர் பஷ்மினா சால்வை பரிசாக வழங்கப்பட்டுள்ளது. 

அமெரிக்கச் சட்டத்தின் பிரகாரம் அந்நாட்டு அதிகாரிளுக்கு வழங்கப்பட்ட  பரிசுகளின் மதிப்பு 480 டாலருக்கு மேல் இருக்கும் பட்சத்தில் அதன் விவரங்களை வெளிப்படுத்த வேண்டியது அவசியம்.

அதன்படி, மோடி வழங்கிய இந்தப் பரிசுகள் அனைத்தும் தற்போது அமெரிக்கத் தேசிய ஆவணக் காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளமை  குறிப்பிட்த்தக்கது.