இந்தியாவின் முதலாவது தனியார் ராக்கெட் விண்ணில் எப்போது செலுத்தப்படுகிறது ?
இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் வரும் 12 ம் தேதி முதல் 16 ம் தேதிக்குள் விண்ணில் செலுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் முதல் ராக்கெட்
கடந்த 2020 ஆம் ஆண்டு விண்வெளித்துறை தனியாருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது, அந்த வகையில் இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் ,இந்த மாதம் 12 -ம் தேதியிலிருந்து 16 -ம் தேதிக்குள் விண்ணில் செலுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு விக்ரம் -எஸ் என பெயரிடப்பட்டுள்ளது.
விக்ரம் எஸ்
விக்ரம் எஸ் ராக்கெட்டானது ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ஏவுதளத்திலிருந்து செலுத்தப்படும் என கூறப்படுகிறது. இதனை ஹைத்ராபாத்தினை சேர்ந்த ஸ்கைரூட் என்ற தனியார் விண்வெளி ஸ்டார்ட் அப் நிறுவனம் .
இந்த ராக்கெட்டை தயாரித்துள்ளது. வணிக நோக்கத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ராக்கெட்டானது ராக்கெட் மூலம் செயற்கை கோள்களை செலுத்த திட்டமிட்டுள்ளது.
தற்போது இந்தியாவில் விண்வெளி துறையில் ராக்கெட் ஏவிய முதலாவது தனியார் நிறுவனம் என்ற பெருமையினை ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் பெற்றுள்ளது.