சென்னையில் 600 கிமீ வேகத்தில் சீறி பாய உள்ள ஹைபர்லூப் ரயில் - அமைச்சர் வெளியிட்ட வீடியோ

Chennai Indian Railways Department of Railways
By Karthikraja Dec 06, 2024 01:30 PM GMT
Report

 ஹைபர்லூப் ரயிலின் சோதனை டிராக் வீடியோவை வெளியாகியுள்ளது.

இந்தியன் ரயில்வே

இந்தியாவின் பொதுப்போக்குவரத்தில் ரயில்வே முக்கிய பங்கு வகிக்கிறது. தினமும் லட்சக்கணக்கானோர் ரயில் மூலம் பயணம் செய்து வருகின்றனர். 

hyberloop train chennai

பயணிகளை கவரும் வகையில் ரயில்வே துறையும் பல்வேறு வசதிகளை செய்கிறது. வந்தே பாரத் திட்டத்திற்குக் கிடைத்த வரவேற்பையடுத்து, வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

ஹைபர்லூப் ரயில்

இந்நிலையில் மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ஹைபர்லூப் ரயில் குறித்த வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில் இந்தியாவின் முதல் ஹைபர்லூப் ரயிலின் சோதனை டிராக் நிறைவடைந்துள்ளதை குறிப்பிட்டுள்ளார். 

hyberloop train chennai

சென்னை தையூரில் உள்ள ஐஐடி மெட்ராஸின் டிஸ்கவரி வளாகத்தில் 410 மீட்டர் ஹைப்பர்லூப் சோதனை டிராக் அமைக்கப்பட்டுள்ளது. இதில், முதற்கட்டமாக 100 கிமீ வேகத்கில் நடைபெற்ற சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ள நிலையில், அடுத்த கட்டமாக 600 கிமீ வேகத்தில் சோதனை நடத்த திட்டமிடப் பட்டுள்ளது. 

இந்த சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டால் மக்களின் போக்குவரத்துக்கு எதிர் வரும் ஆண்டுகளில் வெகுவாக மாறி விடும். 45 நிமிடத்தில் சென்னையில் இருந்து மதுரைக்கு சென்று விடலாம்.