இந்தியாவின் முதல் மாவட்டம் எது தெரியுமா? பலருக்கும் தெரியாத தகவல்
இந்தியா தற்போது 28 மாநிலங்கள் மற்றும் எட்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. மேலும், தமிழ்நாடு மொத்தம் 38 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
பூர்ணியா
இந்தியாவின் முதல் மாவட்டம் பீகாரில் உள்ள பூர்ணியா 1770ஆம் ஆண்டிலேயே பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியால் நிறுவப்பட்டது.

பிப்ரவரி 10, 1770ஆம் ஆண்டு இதை ஒரு மாவட்டமாக அறிவித்துள்ளனர். சுதந்திரத்திற்குப் பிறகு, நாட்டின் பல பகுதிகளைப் போலவே பூர்னியாவும் ஒரு தீவிரமான மாற்றத்தைக் கண்டுள்ளது.
இப்போது பள்ளி, கல்லூரி, பொது பூங்காக்கள், மருத்துவமனைகள் மற்றும் உள்ளூர் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக புதுப்பிக்கப்பட்ட வரலாற்று இடங்கள் உள்ளிட்ட அனைத்து நவீன வசதிகளையும் கொண்டுள்ளது.

ஒவ்வொரு சுதந்திர தினத்திலும் சரியாக அதிகாலை 12:07 மணிக்கு தேசியக் கொடியை ஏற்றுகிறது. இது 1947ஆம் ஆண்டு நாடு ஒரு இறையாண்மை கொண்ட, சுதந்திர நாடாக மாறியதிலிருந்து தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.