இந்திய பொருளாதார வளர்ச்சி 8.4 சதவீதம் உயர்வு - மத்திய அரசு தகவல்

centralgovernment indianeconomic
By Petchi Avudaiappan Nov 30, 2021 10:07 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in வணிகம்
Report

ஜூலை-செப்டம்பர் காலாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 8.4 சதவீதம் உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா பெருந்தொற்றால் பெரும் சரிவை சந்தித்த இந்திய பொருளாதாரம் மெல்ல மெல்ல மீண்டு வருகிறது. அதன்படி நடப்பு நிதியாண்டின் 2-வது காலாண்டான ஜூலை-செப்டம்பர் மாதங்களில் இந்திய பொருளாதார வளர்ச்சி 8.4 %ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிதியாண்டில் முதல் காலாண்டின் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 20.1%ஆக இருந்தது.கொரோனாவுக்கு பிறகு தொழில் உள்பட பல்வேறு துறையின் செயல்பாடு காரணமாக இந்த அளவுக்கு உயர்வு இருந்தது. கடந்த ஆண்டு ஜூலை-செப்டம்பர் காலகட்டத்தில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.4 % ஆக  இருந்தது.

அந்தவகையில் இந்த ஆண்டு பொருளாதாரம், வளர்ச்சியின் பாதையில் உள்ளதாக தேசிய புள்ளி விவர அலுவலகம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் விரைவாக வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா தொடர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.