சீனாவுடன் இந்தியா நெருக்கம்; கவலையா இருக்கு - சொன்னது யார் தெரியுமா?
சீனாவுடன் இந்தியா நெருக்கம் காட்டுவது கவலை அளிப்பதாக அமெரிக்க தூதர் தெரிவித்துள்ளார்.
இந்தியா- சீனா
இந்தியா மீது 50 சதவீத வரிவிதிப்பு அமெரிக்கா விதித்தது. இதனால், இருநாடுகளிடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து பிரதமர் மோடி தன்னுடைய நண்பர், அவருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஆர்வமாக இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார். இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதர் செர்ஜியா கோர், வரி விதிப்பில் இந்தியாவும், அமெரிக்காவும் வெகு தொலைவில் இல்லை.
வரும் வாரங்களில் வர்த்தக பிரச்னைகள் தீர்க்கப்படக்கூடும். அமெரிக்காவிற்கும், இந்தியாவிற்கும் நீண்டகால மூலோபாய இலக்குகள் உள்ளன. இந்தியா இன்று அமெரிக்காவிற்கு உள்ள முதன்மையான நட்பு நாடுகளில் ஒன்று.
தூதர் கவலை
சீனாவுடன் இருப்பதை விட, அமெரிக்காவுடன் இந்தியாவுக்கு நெருக்கமான உறவு உள்ளது. இந்தியாவுக்கு சீனாவை விட அமெரிக்காவுடன் அதிக பொதுவான விஷயங்கள் உள்ளன. நீண்டகாலமாக, இந்த உறவில் அந்த தனிப்பட்ட தொடர்பு இல்லை.
அதை மீண்டும் கொண்டு வருவேன். இந்த விஷயத்தில் அதிபர் டிரம்ப்பே தீவிரம் காட்டி வருகிறார். இந்தியா, சீனாவுடன் நெருக்கம் காட்டுவது கவலையளிக்கிறது. சீன விரிவாக்கவாதம் இந்தியாவின் எல்லையில் மட்டுமல்ல, இந்த பகுதி முழுவதும் உள்ளது.
இந்தியாவை ஒரு அமெரிக்க நட்பு நாடாக வலுப்படுத்துவதும், சீனாவிடம் இருந்து விலக்கி அழைத்துவர முன்னுரிமை கொடுப்போம் என தெரிவித்துள்ளார்.