மொயீன் அலி தேர்வு செய்த இந்தியாவின் ஆல்டைம் பெஸ்ட் 5 பிளேயர்ஸ் - முதலிடத்தில் யார் தெரியுமா?
இந்திய கிரிக்கெட் வீரர்களில் ஆல்டைம் பெஸ்ட் 5 வீரர்களை இங்கிலாந்து வீரர் மொயீன் அலி தேர்வு செய்துள்ளார்
மொயீன் அலி
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் அதிரடி ஆல்ரவுண்டராக இருப்பவர் மொயீன் அலி. இதுவரை 138 ஒருநாள் போட்டிகள், 82 டி20 போட்டிகளில், மற்றும் 68 டெஸ்ட் போட்டிகள் விளையாடியுள்ளார்.
மேலும், கடந்த 2018-ம் ஆண்டு முதல் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் மொயீன் அலி, இதுவரை 59 போட்டிகளில் விளையாடியுள்ளார். தற்போது தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆடி வருகிறார்.
பெஸ்ட் 5 வீரர்கள்
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட அவர், இந்திய கிரிக்கெட் வீரர்களில் ஆல்டைம் பெஸ்ட் 5 வீரர்களை தேர்வு செய்துள்ளார்.
அதில். முதல் இடத்தில் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனியையும் , இரண்டாம் இடத்தில் நட்சத்திர வீரர் விராட் கோலியையும், மூன்றாம் இடத்தில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரையும் தேர்வு செய்துள்ளார்.
மேலும் நான்காம் இடத்தில் முன்னாள் அதிரடி தொடக்க வீரர் விரேந்தர் சேவாக்கையும், ஐந்தாம் இடத்தில் 2011 உலகக்கோப்பை தொடரின் தொடர் நாயகன் விருது வென்ற யுவராஜ் சிங்கை தேர்வு செய்துள்ளார்.