உக்ரைனில் இருந்து இந்தியர்கள் அனைவரும் வெளியேற இந்திய தூதரகம் அறிவுறுத்தல்

announcement ukrainerussia warsitautioninborder indianstoexitukraine indianembassy
By Swetha Subash Feb 15, 2022 06:21 AM GMT
Report

முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் பெரிய நாடான உக்ரைனும் அதன் அண்டை நாடான ரஷியாவும் நீண்ட காலமாகவே கீரியும், பாம்புமாக மோதி வருகின்றன.

இந்த மோதல் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

உக்ரைன் நாட்டின் எல்லையில் ரஷியா 1 லட்சத்துக்கும் மேற்பட்ட படை வீரர்களை குவித்துள்ளதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இரு நாடுகளுக்கும் இடையில் எப்பொழுது வேண்டுமானாலும் போர் வெடிக்கலாம் என்ற அச்சம் உலக நாடுகள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்த சூழலில் பல நாடுகளும் உக்ரைனில் இருந்து தங்கள் நாட்டு மக்களை வெளியேறும்படி அறிவுறுத்தி வருகிறது.

இந்நிலையில் போர் பதற்றம் காரணமாக உக்ரைனில் இருக்கும் இந்தியர்கள் அனைவரும் வெளியேறும்படி உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.