‘’ இந்திய அணி வீரர்கள் பயந்துட்டாங்க ‘’: இன்சமாம் உல் ஹக் கிண்டல்
நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானுடனான போட்டி தொடங்கும் முன்பே இந்திய அணி வீர்ரகள் பயந்துவிட்டார்கள் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் கிண்டலடித்துள்ளார்.
50 ஓவர்கள் மற்றும் டி20 போட்டிகளில் இதுவரை 12 போட்டிகளில் விளையாடி அனைத்திலும் தோல்வி அடைந்திருந்திருந்தது. ஆனால், பாகிஸ்தான் அணி முதல் முறையாக ஐக்கியஅரபு அமீரகத்தில் நடந்த டி20 உலகக் கோப்பை ஆட்டத்தில் இந்திய அணியை வென்றது.
இந்த நிலையில் இந்திய அணியின் தோல்வி குறித்துபாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
டாஸ் போடுவதற்கு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும், பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸமும் வரும்போதிருந்தே, போட்டியை நடத்துவோர் நெருக்கடியில் இருப்பது தெரிந்தது. என்னைப் பொருத்தவரை இந்தியர்கள் போட்டி தொடங்கும் முன்பிருந்தே பதற்றத்திலும், பயத்திலும் இருந்தார்கள்.
அதே சமயம் , பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடியதைப் போன்று இதற்கு முன் மோசமாக இந்திய அணி விளையாடியதே இல்லை. டி20 போட்டியில் இந்திய அணி சிறந்த அணி, அதில் சந்தேகமில்லை.
கடந்த 3 ஆண்டுகளாக இந்திய வீரர்களின் செயல்பாட்டைப் பார்த்தால், அவர்கள் தான் உலகக் கோப்பை வெல்லத் தகுதியானவர்கள் எனத் தோன்றும். ஆனால், பாகிஸ்தானுடனான போட்டி இந்திய வீரர்களுக்கு பெரும் அழுத்த்தைக் கொடுத்து, பயத்தைக் கொண்டு சேர்த்தது.
இந்திய வீரர்கள் சுழற்பந்துவீச்சுக்கு எதிராக சிறப்பாக ஆடுவார்கள், ஆனால், அழுத்ததம்தான் அவர்களை தோல்வியில் தள்ளியது
இவ்வாறு இன்சமாம் தெரிவித்தார்