காதலிப்பதாக நடித்து இளம்பெண்ணை நாசம் செய்த வடமாநில இளைஞர்கள்

Sexual harassment
By Petchi Avudaiappan May 19, 2022 10:15 PM GMT
Report

பெங்களூரு அருகே இளம்பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கர்நாடகா மாநிலம் பெங்களூரு மாவட்ட புறநகரின் ஆனேக்கல் பகுதியில் வசித்தும் வரும் இளம்பெண் ஒருவர் அங்குள்ள தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இதேபகுதியில் வடமாநிலத்தை சேர்ந்த 2 இளைஞர்கள் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். அவர்களில் ஒரு வாலிபருக்கும், இந்த இளம்பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

இது நாளடைவில் காதலாக மாற தன்னுடைய வீட்டுக்கு வரும்படி இளம்பெண்ணை இளைஞர் அழைத்துள்ளார். முதலில் மறுத்த அப்பெண் பின் இளைஞரின் வற்புறுத்தலால் சென்றுள்ளார். அப்போது இளம்பெண்ணுக்கு அவரது காதலன் மயக்க மருந்து கொடுத்ததாக கூறப்படுகிறது. 

இதில் மயங்கிய அந்த பெண்ணை அவரது காதலனும், நண்பரும் சேர்ந்து கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. மயக்கம் தெளிந்த அப்பெண்ணை அவரின் வீட்டுக்கு சென்று அந்த இளைஞர் விட்டுள்ளார். மறுநாள் தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது அப்பெண்ணுக்கு தெரிய வந்துள்ளது. 

இதுகுறித்து அந்த பெண் உடனடியாக சூர்யாநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி 2 இளைஞர்களையும் கைது செய்தனர்.