கடும் எதிர்ப்பு: இந்திய மல்யுத்த சங்கம் சஸ்பெண்ட் - மத்திய அரசு அறிவிப்பு!

Wrestling Delhi
By Sumathi Dec 24, 2023 06:34 AM GMT
Report

இந்திய மல்யுத்த சங்கத்தை மத்திய அரசு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.

பாலியல் புகார் 

மல்யுத்த கூட்டமைப்பு தலைவராக இருந்த பிரிஜ் பூஷண் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் தெரிவித்து பல நாட்களாக ஒலிம்பிக் மல்யுத்த பதக்க வீரரான சாக்‌ஷி மாலிக் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

brij bhushan

அதன்பின், பிரிஜ் பூஷண் தலைமைப் பதவியிலிருந்து விலகிவிட்ட நிலையில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கு கடந்த 20 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.

பத்மஸ்ரீ விருது எதற்கு; பிரதமர் வீட்டருகே விட்டுச்சென்ற பஜ்ரங் புனியா - மோடிக்கு கடிதம்!

பத்மஸ்ரீ விருது எதற்கு; பிரதமர் வீட்டருகே விட்டுச்சென்ற பஜ்ரங் புனியா - மோடிக்கு கடிதம்!

மல்யுத்த சங்கம் சஸ்பெண்ட்

இதில், பூஷணின் நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவரான சஞ்சய் சிங் என்பவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இது மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் உள்ளிட்டோருக்கு பெரும் கவலையை ஏற்படுத்திய நிலையில், மல்யுத்த விளையாட்டிலிருந்து தான் விலகுவதாக சாக்‌ஷி மாலிக் அறிவித்தார்.

Wrestling Federation Of India Membership Suspended

மேலும், பிரிஜ் பூஷண மீதான பாலியல் புகாரில் நடவடிக்கை எடுக்காததால் மத்திய அரசு வழங்கிய பத்மஸ்ரீ விருதை பிரதமர் மோடியிடம் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா திருப்பி அளித்தார். தொடர்ந்து, பல தரப்பிலிருந்து கண்டனங்கள் வலுப்பெற்றன.

இந்நிலையில், பிரிஜ் பூஷண் ஆதரவாளர்கள் நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய மல்யுத்த சங்கத்தை சஸ்பெண்ட் செய்து மத்திய விளையாட்டு துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.