காமன்வெல்த் போட்டி :வெண்கலப்பதக்கம் வென்றார் இந்திய வீரர் மோஹித் கிரேவால்

1 வாரம் முன்

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 6 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கலம் என 21 பதக்கங்களை வென்றுள்ளது.

காமன்வெல்த் போட்டி

8-வது நாளான நேற்று இந்திய வீரர், வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டுகளில் கலந்து கொண்டனர். அந்த வகையில் இந்தியா அதிக பதக்கம் வெல்ல வாய்ப்புள்ளதாக கருதப்படும் மல்யுத்த போட்டிகள் நடைபெற்றன.

காமன்வெல்த் போட்டி :வெண்கலப்பதக்கம் வென்றார் இந்திய வீரர் மோஹித் கிரேவால் | Indian Wrestler Mohit Grewal Wins Bronze In Mens

வெண்கல பதக்கம்

இதில் ஆடவருக்கான 125 கிலோ எடைப்பிரிவின் மூன்றாவது இடத்துக்கான போட்டியில் இந்திய வீரர் மோஹித் கிரேவால், ஆரோன் ஜான்சனை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் இந்தியாவுக்கு மேலும் ஒரு வெண்கலப்பதக்கம் கிடைத்துள்ளது.

முன்னதாக சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா மற்றும் தீபக் புனியா ஆகியோர் தங்கப் பதக்கங்களையும், அன்ஷு மாலிக் வெள்ளிப் பதக்கத்தையும், திவ்யா கக்ரன் வெண்கலப்பதக்கத்தையும் வென்றனர்


இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.