உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றது இந்திய பெண்கள் அணி

indianwomensteam airpistol CairoWorldCup P Nivetha EshaSingh RuchitaVinerkar ISSFWorldCup2022
By Petchi Avudaiappan Mar 03, 2022 09:28 PM GMT
Report

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்திய பெண்கள் அணி தங்கம் வென்று அசத்தியுள்ளது. 

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடந்து வருகிறது. இந்த போட்டி தொடரில்  60 நாடுகளை சேர்ந்த 500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். 

இதில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் இறுதி சுற்றில் இந்திய அணி சார்பில் ஸ்ரீநிவேதா, இஷா சிங், ருசிதா வினிர்கர் ஆகியோர் கொண்ட அணி பங்கேற்றது. இந்த ஆட்டத்தில்  16-6 என்ற புள்ளி கணக்கில் ஜெர்மனி அணியை வீழ்த்தி இந்திய பெண்கள் அணி தங்கப்பதக்கத்தை வென்றது.

இதேபோல் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் இந்திய ஆண்கள் அணி இத்தாலி அணிக்கு எதிராக வெண்கல பதக்கத்திற்காக ஆடிய போட்டியில் 6-16 என்ற புள்ளி கணக்கில் தோல்வியடைந்து 4வது இடத்தைப் பெற்றது.