தயவு செய்து அழாதீங்க உங்கள பார்த்து நம்ம நாடு பெருமை கொள்கிறது ..கண்ணீர் விட்ட இந்திய மகளிர் ஹாக்கி அணி.. ஆறுதல் கூறிய பிரதமர்
பிரதமர் மோடியுடனான உரையாடலின் போது இந்திய மகளிர் ஹாக்கி அணியினர் உணர்ச்சிவசப்பட்டு உடைந்து அழுதது அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்து அணியை எதிர்கொண்டது. இதில் இந்திய பெண்கள் ஹாக்கி அணி 3-4 என்ற கணக்கில் இங்கிலாந்து அணியிடம் கடுமையாக போராடித் தோல்வி அடைந்தது.
இதனால், மகளிர் ஹாக்கி அணியின் பதக்கக் கனவு தகர்ந்தது. இந்த நிலையில்,மகளிர் ஹாக்கி அணியினிரிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசிய காட்சிகள் வெளியாகியுள்ளது.
அதில், பிரதமர் பேசுகையில்,நீங்கள் அனைவரும் அருமையாக விளையாடினீர்கள். உங்களின் நான்கைந்து ஆண்டு கால கடின உழைப்பு பதக்கமாக மாறாவிட்டாலும் கூட உங்களின் வியர்வை இந்தியாவின் கோடிக்கணக்கான மகள்களுக்கு ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது.
#WATCH | Indian Women's hockey team breaks down during telephonic conversation with Prime Minister Narendra Modi. He appreciates them for their performance at #Tokyo2020 pic.twitter.com/n2eWP9Omzj
— ANI (@ANI) August 6, 2021
அதனால், நீங்கள் ஏமாற்றமடையாதீர்கள் என்று கூறினார். அப்போது சில வீராங்கனைகள் அழவே அதற்கு பிரதமர் மோடி, தயவுசெய்து நீங்கள் கண்ணீர் சிந்தாதீர்கள் ஒட்டுமொத்த தேசமும் உங்களைப் பார்த்து பெருமிதம் கொள்கிறது.
இதில் ஏமாற்றமடைவதற்கு ஒன்றுமில்லை. இந்திய ஹாக்கி மறுமலர்ச்சி கண்டுள்ளது. அது உங்களால் தான் சாத்தியமாகியுள்ளது" என்று கூறினார்.
இந்த நிலையில் பிரதமரின் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.