கணவரை பகிர்ந்துக்கொள்ள விரும்பாதவர்கள் இந்திய பெண்கள் : யார் சொன்னது தெரியுமா?

By Petchi Avudaiappan May 03, 2022 04:44 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

இந்தியப் பெண்கள் கணவனை பகிர்ந்துக்கொள்ள விரும்புவதில்லை என்று அலகாபாத் நீதிமன்றம் தெரிவித்த கருத்து இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. 

உலகின் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவின் கலாச்சார பண்பாடு என்பது பாரம்பரியமிக்க ஒன்றாகவே உள்ளது. ஆனால் வெளிநாட்டு கலாச்சாரங்கள் இந்தியாவில் உட்புகுந்தது முதல் காதலியோ அல்லது மனைவியோ தங்களது காதலனையும் - கணவனையும் யாருக்கும் விட்டுக்கொடுப்பதில்லை என்று கூறப்படுகிறது. 

இதனிடையே  உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியைச் சேர்ந்த சுஷில் குமார் என்பவர் ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருக்கும் நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த வேறொரு பெண்ணை அவர் 2வதாக திருமணம் செய்து கொண்டார். முதல் மனைவியை முறையாக விவாகரத்து செய்யாமல் 2வது திருமணத்தை செய்து கொண்டதால், அந்த நபருக்கும் அவரின் முதல் மனைவிக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்துகொண்டே இருந்துள்ளது. 

இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதல் மனைவி தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொள்ளும் முன்பாக தனது கணவன் சுஷில் குமார் மீது, அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதனடிப்படையில் கணவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அதன்பின் தன்னை விடுதலை செய்யக் கோரி சுஷில் குமார் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இதனை விசாரித்த அம்மாநில கீழமை நீதிமன்றம், மனுவை அதிரடியாக நிராகரித்தது. இதனையடுத்து சுஷில் குமார் அதே மனுவை அங்குள்ள அலகாபாத் உயர்நீதிமன்றத்தை அணுகி மேல்முறையீடு செய்தார். இந்த மனுவானது நீதிபதி ராகுல் சதூர்வேதி முன்பு இன்றைய தினம் விசாரணைக்கு வந்தது.

அப்போத்யு வெளிநாடுளை ஒப்பிடும் போது இந்தியப் பெண்கள் தங்கள் கணவர் மீது அதீத அன்பு மற்றும் பொசசிவ்னஸ் வைத்திருக்கிறார்கள் என்றும் பகிர்ந்து கொள்ள விரும்புவதில்லை என்று இருக்கும் போது தனது கணவர் வேறொரு பெண்ணை ரகசிய திருமணம் செய்து கொண்டார் என்பது இந்தியப் பெண்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை என நீதிபதி தெரிவித்தார். 

மேலும் இதனால் தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் அளவுக்கு கூட இந்திய பெண்கள் சென்று விடுகிறார்கள். இதனால் இந்த வழக்கில் முதல் மனைவி இருக்கும் போது 2வது திருமணம் செய்துகொண்ட சுஷில்குமாரை விடுதலை செய்ய முடியாது என்றும் நீதிபதி ராகுல் சதூர்வேதி தனது தீர்ப்பை அறிவித்தார்.