இந்திய அணிக்கு அடித்த அதிர்ஷ்டம் ... ஹாக்கியில் காலிறுதிக்கு தகுதி..

Tokyo Olympics 2020 Indian woman hockey team
By Petchi Avudaiappan Jul 31, 2021 04:34 PM GMT
Report

 டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய மகளிர் அணி கால் இறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக் தொடரின் 9வது நாளான இன்று பல்வேறு பதக்கங்களுக்கான போட்டிகள் நடைபெற்றது. அந்த வகையில் இன்று மகளிர் ஹாக்கி அணிக்கான கடைசி லீக் போட்டி நடைபெற்றது. ஏற்கனவே நடந்த மூன்று லீக் போட்டிகளிலும் இந்திய மகளிர் அணி தோற்றால் இப்போட்டி வாழ்வா? சாவா? என்ற நிலையில் இருந்தது.

இந்த போட்டியில் இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அதிக புள்ளிகள் வித்தியாசத்தில் இந்தியா வென்றால் தான் ஒலிம்பிக் காலிறுதி ஹாக்கி போட்டிக்கு இந்தியா தகுதிப் பெற முடியும் என்பதால் ரசிகர்கள் இப்போட்டியை பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

முதல் கால் பகுதி ஆட்டம் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிய, தொடர்ந்து விட்டுக்கொடுக்காமல் இரு அணிகளும் கோல் அடித்து வந்தது. இறுதியாக ஆட்டத்தின் முடிவில் இந்தியா 4 - 3 என்ற புள்ளிக்கணக்கில் த்ரில் வெற்றி பெற்றது.

ஆனால் புள்ளிகள் குறைவாக இருந்ததால் காலிறுதிப்போட்டிக்கு நேரடியாக செல்ல முடியாமல் இருந்தது. இதனை முடிவு செய்யும் விதமாக மற்றொரு இறுதி ஆட்டத்தில் அயர்லாந்து, இங்கிலாந்து ஆட்டம் நடைபெற்றது.

இந்த போட்டியில் அயர்லாந்து அணி இங்கிலாந்திடம் 2-0 என்ற கணக்கில் மோசமாக தோல்வியடைந்தது. இதனால் இந்திய மகளிர் அணி ஒலிம்பிக் காலிறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.