கனடாவில் வாழ்ந்துவந்த இந்திய இளம்பெண் மாரடைப்பால் மரணம்
An Indian woman died of a heart attack in Canada: கனடாவில் வாழ்ந்துவந்த இந்திய இளம்பெண்ணொருவர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.
இந்தியாவின் பஞ்சாபைச் சேர்ந்த இளம்பெண்ணொருவர் கல்வி கற்பதற்காக கனடா சென்றிருந்த நிலையில், அவர் மாரடைப்பால் மரணமடைந்ததாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
கல்வி கற்பதற்காக கனடா சென்றிருந்த இளம்பெண்
அன்மோல்தீப் கௌர் (24), நான்கு ஆண்டுகளுக்கு முன் கல்வி கற்பதற்காக கனடா சென்றிருந்தார்.

மனித்தோபா மாகாணத்தின் வின்னிபெக் நகரில் கல்வி கற்று முடித்து, நிரந்தர குடியிருப்பு அனுமதிக்காக விண்ணப்பித்துவிட்டு காத்திருந்தார் கௌர்.
இந்நிலையில், செவ்வாயன்று திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்ட கௌர், மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.
கௌர் உயிரிழந்த செய்தி அறிந்து அவரது குடும்பத்தினரும் உறவினர்களும் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |