ரூ.4500 கோடி அரண்மனை..ராணியாக வாழும் இளம்பெண் யார் ?அதுவும் இந்தியாவில்..
இந்தியாவில் இன்றளவும் ராணியாக வாழும் இளம் பெண் குறித்து அறிந்து கொள்ளலாம்.
இந்தியா
இந்தியாவில் மன்னராட்சி முடிவுக்கு வந்த பிறகும் அவர்களது வம்சாவளியில் உள்ளவர்கள் மரபுகளையும் வழக்கங்களை இன்றளவும் பின்பற்றி வருகின்றனர். அதன்படி, ரூ.4500 கோடி மதிப்புள்ள அரண்மனையில் இளம்பெண் ஒருவர் ராணியாக வாழ்ந்து வருகிறார் என்றால் நம்ப முடிகிறதா?இது குறித்துத் தெரிந்து கொள்ளலாம்.
இந்தியாவில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள குவாலியரில் சிந்தியா குடும்பம் அரச குடும்பம் வாழ்ந்து வருகிறது. இந்த குடும்பத்தைச் சேர்ந்த ஜோதிராதித்ய சிந்தியா மத்திய அமைச்சராக உள்ளார்.இவருக்கு பிரியதர்ஷினி ராஜே என்ற மகள் உள்ளார்.
இன்றளவும் ராணி
பிரியதர்ஷினி ஆப்பிள் நிறுவனத்தில் பயிற்சி வடிவமைப்பாளராகப் பணியாற்றி உள்ளார்.இவர் தான் சிந்தியா குடும்பம் அரச குடும்பத்தின் ராணியாக உள்ளார். இவர் வசிக்கும் அரச இல்லத்தின் பெயர் ஜெய் விலாஸ் அரண்மனை. 12,40,771 சதுர அடி பரப்பளவில் 400 அறைகளைக் கொண்டுள்ளது.
இந்த அரண்மனையில் 560 கிலோ தங்கத்தால் ஆன சுவரைக் கொண்ட அறை, உடற்பயிற்சி கூடம், நீச்சல் குளம், ஆடம்பர தனி அறைகள் மற்றும் அருங்காட்சியகங்கள் எனப் பல சிறப்புகளைக் கொண்டுள்ளது. இதன் மதிப்பு 4,500 முதல் 5,000 கோடி ரூபாய் எனக் கூறப்படுகிறது.