கேமராக் காதலன் - Pictures of the Year விருதை தட்டித் தூக்கிய இந்திய வம்சாவளியான Engineer

United States of America
By Sumathi Feb 21, 2023 08:16 AM GMT
Report

இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரின் புகைப்படம் 2023 ஆண்டின் National Geographic 'Pictures of the Year' விருதை வென்றுள்ளது.

பிக்சர்ஸ் ஆஃப் தி இயர்

இந்திய வம்சாவளியை சேர்ந்த மென்பொறியாளர் கார்த்திக். இவர் எடுத்த புகைப்படமானது 2023 ஆண்டின் National Geographic 'Pictures of the Year' விருதை வென்றுள்ளது. மேலும் 5,000 புகைப்படங்களில் இருந்து இவரின் புகைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது மற்றும் வெற்றி பெற்ற புகைப்படம் நேஷனல் ஜியோகிராஃபிக் இதழின் மே இதழில் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

கேமராக் காதலன் - Pictures of the Year விருதை தட்டித் தூக்கிய இந்திய வம்சாவளியான Engineer | Indian Wins Natgeo Pictures Of The Year Award

இயற்கை, மக்கள், இடங்கள், விலங்குகள் (Nature, People, Places and Animals) என நான்கு பிரிவுகளை உள்ளடக்கிய இப்போட்டியில் மொத்தம் 2 மில்லியனுக்கும் அதிகமான புகைப்படங்கள் பங்கு பெற்றுள்ளன. 2022-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட தங்களுக்குப் பிடித்தமான புகைப்படத்தைச் சமர்ப்பிக்க நாடு முழுவதிலுமிருந்து ஆர்வமுள்ள புகைப்படக் கலைஞர்களுக்கு National Geographic அழைப்பு விடுத்தது.

இந்திய- அமெரிக்கர்

அனுபவம் வாய்ந்த National Geographic புகைப்பட எடிட்டர்கள் குழுவின் மத்தியில் கடுமையான சோதனை செயல்முறைக்கு உட்படுத்தப்பட்ட பிறகு, கார்த்திக் சுப்ரமணியத்தின் “டான்ஸ் ஆஃப் தி ஈகிள்ஸ்” என்ற புகைப்படம் பரிசு வென்றதாக அறிவிக்கப்பட்டது. இப்புகைப்படமானது அலாஸ்காவில் உள்ள சில்காட் பால்ட் ஈகிள் ப்ரெசர்வில் உள்ள ஒரு மரத்தில் ஒரு "Bald Eagle" தனது கூட்டாளிகளுடன் ஒரு முக்கிய இடத்திற்காக போராடுவதை சித்தரிக்கிறது.

கேமராக் காதலன் - Pictures of the Year விருதை தட்டித் தூக்கிய இந்திய வம்சாவளியான Engineer | Indian Wins Natgeo Pictures Of The Year Award

“ஒவ்வொரு ஆண்டும் நவம்பரில், நூற்றுக்கணக்கான வெண்தலை கழுகுகள் அலாஸ்காவின் ஹைன்ஸ் அருகே உள்ள சில்காட் பால்ட் ஈகிள் காப்பகத்தில் சால்மன் மீன் விருந்துக்கு கூடிவருகின்றன. அவைகளைப் புகைப்படம் எடுக்க கடந்த இரண்டு நவம்பர் மாதங்களில் நான் அங்கு சென்றேன்,” என்கிறார் கார்த்திக் சுப்ரமணியம்.

அவரது பணிக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், நேஷனல் ஜியோகிராஃபிக் இதழின் மே இதழில், நாட் ஜியோவின் முன்னணி புகைப்படக் கலைஞர்களுடன் இணைந்து சுப்ரமணியம் தனது புகைப்படத்தை வெளியிட்டு, பத்திரிகைக்கு ஆறு மாத டிஜிட்டல் சந்தாவைப் பெறுவார்.மேலும் இவர் எடுத்த புகைப்படமானது இணையத்தில் வைரலாகி பலரது பாராட்டுகளையும் பெற்றுவருகிறது.