காமேனி மரணம்: துக்கம் அனுசரிக்கும் இந்திய கிராமம்- என்ன காரணம்?
ஈரானின் தலைவர் அயதுல்லா அலி காமேனி மரணத்திற்காக இந்தியாவின் கர்நாடகாவில் உள்ள அலிபுர் கிராமம் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கிறது.
மினி ஈரான் என்றழைக்கப்படும் இக்கிராமத்தில் வசிக்கும் 25,000 மக்கள் ஷியா முஸ்லிம்களின் கலாசாரத்தை பின்பற்றுகின்றனர்.
காமேனி இறந்த தினத்தன்று கடைகளை அடைத்துவிட்ட மக்கள், அவரின் புகைப்படத்தை வைத்து இரங்கல் தெரிவித்தனர்.
அந்நிகழ்வில் பலரும் கருப்பு உடை அணிந்திருந்தனர், இக்கிராமத்தின் பெயர் பெல்லிகுண்டே என்றும், பின்னாளில் அலிபூர் என பெயர் மாற்றம் பெற்றதாகவும் கூறப்படுகிறது.
1986ஆம் ஆண்டு காமேனி பதவி வகித்தபோது, அலிபூரில் உள்ள மருத்துவமனையைத் திறந்து வைப்பதற்காக வருகை புரிந்தது குறிப்பிடத்தக்கது.
At the start of the Revolution, I traveled to #India. I saw that the Revolution & Imam Khomeini had preceded us there.
— Khamenei.ir (@khamenei_ir) February 10, 2020
The same is true now. The message of Imam & the Revolution is strongly felt in popular & intellectual gatherings & in the gatherings of committed, pure people. pic.twitter.com/JJWku1LHeT