திமுக கூட்டணியில் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்பு
election
tamilnadu
dmk
By Jon
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்தியன் முஸ்லீம் லீக் கூட்டணிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்தியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள் என ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் அந்த 3 தொகுதிக்கான வேட்பாளர்களின் விருப்ப மனு பெறப்பட்டன. அதன்படி மூன்று வேட்பாளர்கள் பெயர் தேர்வாகியுள்ளனர்.
அதில் கடையநல்லூர் தொகுதியில் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ, வாணியம்பாடி தொகுதியில் எம்.முஹம்மது நயீம் மற்றும் சிதம்பரம் தொகுதியில் ஏ.எஸ். அப்துல் ரஹ்மான் ரப்பானி ஆகியோர் போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.