மாலத்தீவிலிருந்து இந்திய படைகள் உடனே வெளியேற வேண்டும்- அதிபர் முய்சு திட்டவட்டம்!
மாலத்தீவிலிருந்து இந்திய படைகள் உடனே வெளியேற வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் முகமது முய்சு மீண்டும் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
அதிபர் முகமது முய்சு
மாலத்தீவில் கடந்த செப்டம்பரில் அதிபர் தேர்தல் நடந்தது. இதில் மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தற்போதைய அதிபர் இப்ராஹிம் முகமது சோலி தோல்வியடைந்தார். ஜனநாயக கட்சியின் முகமது முய்சு வெற்றி பெற்று மாலத்தீவில் புதிய அதிபரானார்.
சீன ஆதரவாளரான முகமது முய்சு தனது தேர்தல் பிரசாரத்தின் போது 'மாலத்தீவிலிருந்து இந்தியப் படைகள் முழுவதும் வெளியேற நடவடிக்கை எடுப்பேன் என்று தெரிவித்திருந்தார். தேர்தலில் வென்று அதிபரானதும் மாலத்தீவிலிருந்து இந்திய படைகள் வெளியேற வேண்டும் என்று முகமது முய்சு தெரிவித்தார். இந்நிலையில் மீண்டும் ஒருமுறை அவர் இந்திய படைகள் வெளியேற வேண்டும் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.
நிலைப்பாடு இதுதான்
இது தொடர்பாக அவர் கூறியதாவது "இந்திய ராணுவம் மாலத்தீவிலிருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு. வேறு எந்த நாட்டின் ராணுவம் இங்கே இருந்தாலும் எனது நிலைப்பாடு இதுவே தான்" என்று அதிபர் முகமது முய்சு தெரிவித்துள்ளார்.
மாலத்தீவில் உள்ள ரேடார் நிலையங்களையும் கண்காணிப்பு விமானங்களையும், சுமார் 70 இந்திய ராணுவ வீரர்கள் பராமரித்து வருகின்றனர். மேலும், மாலத்தீவின் பிரத்யேக பொருளாதார மண்டலத்தில் இந்தியப் போர்க் போர்க் கப்பல்கள் ரோந்து செல்ல உதவுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.