பந்துகளை தெறிக்கவிட்டு மிரட்டிய ரோஹித் சர்மா - இந்திய அணி அதிரடி வெற்றி
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு அபார வெற்றி பெற்றது.
அபார பந்துவீச்சு
இந்தியாவிற்கு வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இத்தொடரின் 2வது டி.20 போட்டி நாக்குபூர் மைதானத்தில் இன்று நடைபெற்றது.

இப்போட்டி இரண்டரை மணி நேரம் தாமதமாக தொடங்கியதால் போட்டியின் ஓவரும் தலா 8 ஆக பிரிக்கப்பட்டது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
பின்னர் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் 5 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் எடுத்தது.

அதிரடியாக விளையாடி ரோஹித் சர்மா
91 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணியின் துவக்க வீரர்களாக ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல் களம் இறங்கினர்.
கே.எல்.ராகுல் 10 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார். விராட் கோலி (11) மற்றும் சூர்யகுமார் யாதவ் (0) அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து வந்த வேகத்தில் வெளியேறினர். ஹர்திக் பாண்டியா 9 ரன்களில் விக்கெட் இழந்தார்.ஒரு புறம் அடுத்தடுத்து விக்கெட் பறிகொடுத்தாலும் ரோஹித் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
7வது ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் தினேஷ் கார்த்திக், முதல் பந்தில் சிக்ஸரும், இரண்டாவது பந்து பவுண்டரி அடித்து வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

இதன் மூலம் 7.2 வது ஓவரில் இந்திய அணி அசால்டாக எட்டிய இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலி அணிக்கு எதிரான தொடரில் 1-1 என்ற கணக்கில் இந்திய அணி சமநிலையில் உள்ளது.