திடீரென்று சரிந்த இந்திய அணி:இலங்கை அணிக்கு 226 ரன் இலக்கு!
இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 225 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
இந்திய கிரிக்கெட் அணி, இலங்கைக்கு சென்று மூன்று ஒரு நாள் மற்றும் மூன்று டி20 தொடரில் விளையாடுகிறது.
முதல் இரண்டு போட்டிகளில் வென்று இந்திய கிரிக்கெட் அணி தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான, மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி கொழும்பில் இன்று நடந்து வருகிறது.
India lose Manish Pandey in the second over after the restart ?
— ICC (@ICC) July 23, 2021
The visitors are four down for 158 after 25 overs. How much will they post? ?#SLvIND | https://t.co/eLmZty22kE pic.twitter.com/p8TNOKgenI
மழை காரணமாக ஆட்டம் 47 ஓவர்களாக குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவான் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
தொடக்க ஆட்டக்காரர்களாக பிருத்வி ஷாவும் ஷிகர் தவானும் களமிறங்கினர். சமீரா பந்துவீச்சில் 13 ரன்களில் வெளியேறினார் தவான்.
அடுத்து வந்த சஞ்சு சாம்சனும் பிருத்வி ஷாவும் நிதானமான ஆட்டத்தில் ஈடுபட்டனர். 49 ரன்கள் எடுத்த நிலையில் ஷனகா பந்துவீச்சில் எல்பிடபிள்யூ ஆனார் அடுத்து களமிறங்கிய சூரியகுமார் யாதவ் அதிரடியாக ஆடினார். 37 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இந்த நிலையில் இந்திய அணி 43.1 ஓவரில் 225 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.

Food recipe: உளுந்து சாதத்திற்கு எள்ளு துவையல்- இதுவரையில் யாரும் செய்யாத பக்குவத்தில் செய்ய தெரியுமா? Manithan
