இந்திய அணியின் வீரர்கள் தங்கியுள்ள ஹோட்டலின் ஒரு அறையின் வாடகை - எவ்வளவு தெரியுமா?
இந்திய அணியின் வீரர்கள் தங்கியுள்ள அறையின் வாடகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
லீலா பேலஸ்
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியானது செப்டம்பர் 19-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்கியுள்ளது. அதன்படி, இந்திய அணியானது தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வருகிறது.
வசதிகள்
அதற்காக இந்திய வீரர்கள் லீலா பேலஸ் ஹோட்டலில் தங்கியுள்ளனர். மொத்தம் 11 அடுக்குமாடிக்கொண்ட இந்த ஹோட்டலில் 326 சொகுசு அறைகள் உள்ளன. இங்கு ஒரு ரூமின் ஒருநாள் வாடகை இந்திய மதிப்பில் சுமார் 12,744 ரூபாய்.
அதோடு நவீன ஜிம் வசதி, ஆலோசனை நடத்த தனிக்கூடம், ஓய்வெடுக்க தனி அறைகள், நீச்சல் குளம், பார்க் மற்றும் ஒவ்வொரு அறையிலும் பால்கனி என பல்வேறு வசதிகள் உள்ளது.
வழக்கமாக இந்திய வீரர்கள் ஹோட்டல் தாஜ் ஹோட்டலில் தங்குவார்கள். இம்முறை லீலா பேலஸ் ஹோட்டலில் அவர்கள் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.