டி20 உலக கோப்பை போட்டி; நெதர்லாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி
டி20 உலக கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் நெதர்லாந்து அணியுடன் மோதிய இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
டி20 உலக கோப்பை தொடர்
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 போட்டிகள் நடைபெற்று வருகிறது.
சிட்னியில் இன்று நடைபெறும் போட்டியில் இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. சிட்னியில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி, வங்கதேசத்தை வீழ்த்தியிருந்தது.
டாஸ் வென்று இந்திய அணி முதலில் பேட் செய்ய தீர்மானித்தது. இதன்படி முதலில் களமிங்கிய இந்திய அணியில், கே.எல்.ராகுல் 9 ரன்னில் அவுட் ஆனார்.
கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அரைசதமடித்த ரோஹித் சர்மா 53 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதன் பின் கோலி – சூரியகுமார் யாதவ் ஜோடி அதிரடியாக விளையாடியது. சிறப்பாக விளையாடிய கோலி 62 ரன்களும், சூரியகுமார் 51 ரன்களும் குவித்தனர். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் குவித்தது.
இந்திய அணி வெற்றி
180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது நெதர்லாந்து அணி. தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
இந்திய அணியின் அபார பந்துவீச்சால் நெதர்லாந்து வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். 20 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து அணி 9 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் எடுத்தது.
இந்த நிலையில் டி 20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் 2வது வெற்றியை பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.