சார்.. இவங்க ரெண்டு பேர் வந்துட்டா மொத்தமா இந்தியன் டீம்மாறும் : யார் அந்த இருவர் ? சொன்னது யார் ?

ravindrajadeja indianteam hardikpandiya
By Irumporai Jan 23, 2022 04:59 AM GMT
Report

ஹர்திக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் உள்ளே வந்து விட்டால் இந்திய அணியே மொத்தமாக மாற்றம் காணும் என்று தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.  

தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் சென்றுள்ள  இந்திய அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளின் முதல் மற்றும் இரண்டு, மூன்றாவது  போட்டிகளில் படுதோல்வியை சந்தித்து தொடரை இழந்தது.  

அதனைத் தொடர்ந்து நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் முதல் 2 போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியை சந்தித்து தொடரை இழந்திருக்கிறது.

முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணிக்கு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் எதிர்பார்த்த அளவிற்கு செயல்படவில்லை. மிடில் ஓவர்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து அணியை இக்கட்டான சூழ்நிலையில் அணி உள்ளது.


சார்.. இவங்க ரெண்டு பேர் வந்துட்டா மொத்தமா  இந்தியன் டீம்மாறும்  : யார் அந்த இருவர் ? சொன்னது யார் ? | Indian Team Hardik Pandya Ravindra Jadeja

இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா மற்றும் ஜடேஜா இருவரும் அணிக்குள் வந்து விட்டால், இந்திய அணியில் பெரிய மாற்றம் வந்துவிடும் என்று கருத்து  தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியுள்ள கருத்தின்படி:

“ஹர்திக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் இந்திய அணிக்கு மிக முக்கியமான ஆல்ரவுண்டர்கள். பொக்கிஷம் என்றே கூறலாம். அவர்கள் வந்து விட்டால், இந்திய அணியின் அணுகுமுறை அடுத்த கட்டத்திற்கு சென்று விடும்.

ஹர்திக் பாண்டியா எளிதாக சிக்சர்கள் அடித்து ரன் குவிக்கும் வேகத்தை அதிகப்படுத்தி விடுவார். 7வது இடத்தில் உள்ளே வரும் ஜடேஜா மிகவும் பயங்கரமான வீரராக இருக்கிறார். நாளுக்கு நாள் அவரது பேட்டிங் மிகவும் சிறப்பானதாக இருக்கிறது. இவங்க ரெண்டு பேர் உள்ள வந்தா, இந்திய அணி மொத்தமாக மாற்றம் காணும் எனக் கூறியுள்ளார்.

அதே சமயம், அணியில் , அஷ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் இருப்பதால், சுழல் பந்துவீச்சு இன்னும் பலமாக உள்ளது , ஆனால் இந்திய அணியின் பேட்டிங் அணுகுமுறை கொஞ்சம் மந்தமாக உள்ளது.ஆகையால் பாண்டியா மற்றும் ஜடேஜா வந்துவிட்டால், இந்தக் குறை தெரியாது என கூறியுள்ளார்.