Friday, Jul 18, 2025

கழட்டி விடப்பட்ட இரு முக்கிய வீரர்கள் - வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

Teamindia Ravichandranashwin INDvWI Juspritbumrah
By Petchi Avudaiappan 3 years ago
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

தென்னாப்பிரிக்கா தொடரில் ஏற்பட்ட தோல்விக்கு பிறகு இந்திய அணி அதன் சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர் கொள்கிறது. இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரில் இந்திய அணியில் சில வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு பல்வேறு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

கழட்டி விடப்பட்ட இரு முக்கிய வீரர்கள் - வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு | Indian Team Announced For Wi Tour

அதன்படி மூத்த வீரர்கள் அஸ்வின் மற்றும் பும்ரா ஆகியோருக்கு ஒய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரை எப்படியாவது வெல்ல வேண்டும் என இந்திய அணி முனைப்பில் உள்ளது. 

ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்.), ருதுராஜ் கெய்க்வாட், ஷிகர், விராட் கோலி, சூர்யா குமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (வி.கீ), சாஹர், ஷர்துல் தாக்கூர், சாஹல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், சிராஜ், பிரசித் கிருஷ்ணா, அவேஷ் கான் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 

டி20 தொடருக்கான அணியில் ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), இஷான் கிஷன், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யா குமார் யாதவ், ரிஷப் பந்த் (வி.கீ), வெங்கடேஷ் ஐயர், தீபக் சாஹர், ஷர்துல், ரவி பிஷ்னோய், அக்சர் படேல், சாஹல், வாஷிங்டன் சுந்தர், சிராஜ், புவனேஷ்வர் குமார், அவேஷ் கான், ஹர்ஷல் படேல் ஆகியோருக்கு இடம் கிடைத்துள்ளது.