தென்னாப்பிரிக்காவுடன் மோதப்போகும் இந்திய அணி இதுதான் - வீரர்களை அறிவித்த பிசிசிஐ
தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்திற்கான இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
நியூசிலாந்து தொடரை வெற்றிகரமாக முடித்த விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அடுத்ததாக தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.வரும் டிசம்பர் 16 ஆம் தேதி முதல் தொடங்கவிருந்த இந்த தொடர் ஒமிக்ரான் வைரஸ் தாக்கத்தால் டிசம்பர் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த சுற்றுப்பயணத்திற்கான இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் விராட் கோலி (கேப்டன்), ரோகித் ஷர்மா (துணை கேப்டன்), கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால், புஜாரா, ரஹானே, ஷ்ரேயஸ் ஐயர், ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சாஹா (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ஜெயந்த் யாதவ், இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், பும்ரா, ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
காயம் காரணமாக ரவீந்திர ஜடேஜா, ஷூப்மன் கில், அக்சர் படேல், ராகுல் சாஹர் ஆகியோர் அணியில் சேர்க்கப்படவில்லை என பிசிசிஐ தெரிவித்துள்ளது.இந்த தொடரில் இருந்து ரஹானேவின் துணை கேப்டன் பொறுப்பு பறிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.