Thursday, May 8, 2025

இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவிப்பு

Virat Kohli Indian Cricket Team T20 World Cup 2022 Bangladesh Cricket Team
By Thahir 3 years ago
Report

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்துள்ளது.

Indian team accumulated 184 runs

டி20 உலக கோப்பையின் இன்றைய ஆட்டத்தில் வங்காளதேசம் மற்றும் இந்திய அணிகள் மோதின.

இந்த போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது இந்திய அணி.

இதை தொடர்ந்து தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல், ரோகித் சர்மா களம் இறங்கினர். இதில் கேப்டன் ரோகித் சர்மா 2 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார்.

பின்னர் வந்த விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் ஜோடி அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டது. இதில் கே.எல்.ராகுல் 50 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார்.

இதை தொடர்ந்து வந்த சூர்ய குமார் யாதவ் 16 பந்துகளில் 30 ரன்கள் எடுத்த நிலையில் அவரும் விக்கெட் பறிகொடுத்தார்.

இந்த நிலையில் கடைசி வரை அவுட்டாகமல் நின்ற விராட் கோலி அதிரடியாக விளையாடி 44 பந்துகளில் 64 ரன்கள் குவித்தார்.

வங்காளதேசம் அணியில் ஹசன் முகம்மது அதிகபட்டசமாக 3 விக்கெட்டுகளையும், சாகிப் அல் ஹசன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

வங்காளதேசம் 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.