கனடாவில் இந்திய மாணவர் சுட்டுக் கொலை!
கனடாவில் சுரங்க நடைப்பாதை ரயில் நிலையத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இந்திய மாணவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
உத்தர பிரதேசம் மாநிலம் காஜியாபாத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் வாசுதேவ் என்பவர் டொரோண்டோவில் உள்ள கல்லுாரியில் மேலாண்மை படிப்பு படித்து வருகிறார்.
கடந்த வியாழக்கிழமை சுரங்கப்பாதையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கார்த்திக் வாசுதேவ் சுட்டுக்கொல்லப்பட்டதாக இந்திய துாதரகம் தெரிவித்துள்ளது.
கொலைக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை என அவரது உறவினர் கூறியுள்ளார். இதையடுத்து கார்த்திக் உடலை இந்தியா கொண்டு வருவது குறித்து அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய துாதரகம் அறிவித்துள்ளது.
மேலும் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த கார்த்திக் குடும்பத்தினருக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இரங்கல் தெரிவித்துள்ளார்.