ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தில் அசத்திய தமிழக மாணவி : குவியும் வாழ்த்துக்கள்
லண்டன் ஆக்ஸ்போர்ட் புருக்ஸ் பல்கலைக்கழகத்தின் மாணவர்களுக்கான தேர்தலில் துணை தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஒரே இந்திய மாணவி 1364 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் பாஷின பாத்திமா (மிஸ் இந்தியா 2020) துணை தலைவர் (VP)பதவிக்கு இவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஆக்ஸ்போர்டில் அசத்தல்
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் IBM படித்து வரும் இவர் பள்ளி படிப்பை சென்னை ஆழ்வார் திருநகர் சென்ட் ஜான்ஸ் பள்ளியிலும், கல்லூரி படிப்பை ஸ்டேல்லா மேரிஸ் கல்லூரியில் முடித்துள்ளார்.இந்தியர்கள் மட்டுமல்லாது பிற நாடுகளில் இருந்து வந்து தங்கி படிக்கும் மாணவர்கள் இவருக்கு பெருவாரியான வாக்குகளை அளித்துள்ளார்கள்.

தலைவராக இந்திய மாணவி
மிகவும் பிரபலமான மாணவியாக பாஷினிபாத்திமா இருப்பதால் இந்த வெற்றி அவருக்கு கிடைக்குமென்று தொடக்கத்திலேயே பேசப்பட்டது. பாஷினிபாத்திமாவிடம் இந்த வெற்றியை பற்றி கேட்ட போது நான் இந்தியன் குறிப்பாக தமிழ்நாடு அன்பு,பண்பு ,வீரம் மூன்றும் கலந்த கலச்சாரம் உள்ள தமிழ்நாட்டு பெண் என்பதால் எனக்கு அனைவரும் வாக்களித்துள்ளனர் அவர்கள் அனைவருக்கும் நன்றி.
குறிப்பாக எனது பெற்றோர்கள் என்னை மிகவும் ஊக்கப்படுத்தினார்கள்அவர்களுக்கும் நன்றி சாதிக்க வேண்டும் என்று வாழ்கிறோம் என்று கூறினார்.