கைக்கு வந்த பதக்க வாய்ப்பை இழந்த சவுரப் சவுத்ரி..இந்தியாவுக்கு மேலும் அதிர்ச்சி
டோக்கியோ ஒலிம்பிக்கின் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் சவுரப் சவுத்ரி பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்.
இன்று காலை நடந்த பெண்கள் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் போட்டியில், இந்தியாவின் இளவேனில் வாலறிவன் மற்றும் அபூர்வி சண்டேலா ஆகியோர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற தவறினர். அதேசமயம் 10 மீ ஆண்கள் ஏர் ரைஃபிள் பிரிவில்,இந்தியாவின் சவுரப் சவுத்ரி மொத்தம் 586 மதிப்பெண்களைப் பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.
மேலும் அவர் அப்போட்டியில் முதலிடத்தையும் பிடித்து இறுதிச் சுற்றுக்குள் நுழைந்த முதல் இந்தியர் என்ற சிறப்பையும் பெற்றார். மற்றொரு வீரரான அபிஷேக் வர்மா 575 புள்ளிகள் பெற்று 17 வது இடம் பிடித்ததால், போட்டியிலிருந்து வெளியேறினார்.
ஆனால் இறுதிப் போட்டியில் சவுரப் சவுத்ரி 137.4 புள்ளிகள் மட்டும் பெற்று, ஏழாவது இடத்தை பிடித்தார்.இதனால் பதக்க வாய்ப்பு நழுவி அவர் போட்டியில் இருந்து வெளியேறினார்.
Spicy Chicken Fry: சிக்கன் வறுவலை இப்படி செய்து பாருங்க... அசைவ பிரியர்களே மிஸ் பண்ணிடாதீங்க Manithan
Tamizha Tamizha: விதவை தாய்க்கு தலையில் பூ வைத்து அழகுபார்த்த மகன்! அரங்கமே கண்கலங்கிய தருணம் Manithan