சம்மர் ஹாலிடே ட்ரிப் - இந்திய ரூபாய்க்கு அதிக மதிப்புள்ள இந்த நாடுகளுக்கு போங்க.!
வெளிநாடுகளுக்கு கம்மி பட்ஜெட்டில் சுற்றுலா பயணம் மேற்கொள்ள இந்த நாடுகளுக்கு செல்லுங்கள்..
வெக்கேஷன் பிளான்

இந்திய நாணயங்கள் மற்ற வெளி நாடுகளுக்கு சென்றால் செல்லாது. அதனால் நாம் எந்த நாட்டிற்கு செல்கிறோமோ அந்த நாட்டின் நாணயத்திற்கு ஏற்ப நம் நாட்டின் நாணயத்தை மாற்றி தான் செல்ல முடியும். மேலும் டாலர் மதிப்பிற்கு நம் நாட்டின் ரூபாய் மதிப்பு குறைவு. ஆனால், ஒரு சில நாடுகளில் நம் நாட்டின் ரூபாய் மதிப்பு அதிகம்.
நாடுகளின் பண மதிப்பு
அந்த சில நாடுகளின் மதிப்பு பட்டியல் இதோ... ஈரான் நாடு, அந்நாட்டு நாணயம் நம் இந்திய ரூபாய் மதிப்பிற்கு, ₹1 = 569.43 ஈரானிய ரியால்.
அடுத்தது வியட்நாம், அங்கு ₹1 = 310.46 வியட்நாமிய டாங்.

தெற்கு ஆசிய நாடான இந்தோனேசியா, உலகின் மிகப்பெரிய தீவுகளை கொண்ட இந்தோனேசியா தீவு கூட்ட நாட்டில் ₹1 = 195.09 இந்தோனேசிய ரூபியா.
மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு அற்புதமான நாடான கினியா, இங்கு ₹1 = 134.13 கினியன் பிராங்க்.
அடுத்தது கம்போடியா நாட்டில் ₹1 =55.73 கம்போடிய ரியல்.

தெற்கு அமெரிக்காவில் உள்ள கொலம்பியா, அங்கு ₹1 = 49.66 கொலம்பிய பேசோ. இந்திய ரூபாய் ₹1 = 49.66 கொலம்பிய பேசோ. இங்கு பத்தாயிரம் ரூபாய் எடுத்துக் சென்றால், அது 5 லட்சம் கொலம்பிய பேசோவாக மாற்றிக்கொள்ளலாம்.
பட்ஜெட்டில் சுற்றுலா பிளான் போடுபவர்கள் இதுபோன்ற நாட்டிற்கு சென்று மகிழுங்கள்.
