657 பயணிகள் ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்.. மத்திய அரசு அதிரடி முடிவு
நாடு முழுவதும் 657 பயணிகள் ரயில் சேவைகளை தற்காலிகமாக நிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
நாடு முழுவதும் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக பல மாநிலங்கள் நீண்ட நேர மின்வெட்டு பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. இதனால் மக்கள் மிகவும் அவதியடைந்து வரும் நிலையில் இதனை சரிசெய்ய மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
நிலக்கரி தட்டுப்பாட்டு ஏற்பட்டுள்ள பல மாநிலங்களில் 533 சரக்கு பெட்டிகளில் நிலக்கரி கொண்டு செல்ல மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதில் மின்துறைக்கு வழங்க ரயில்களில் 1.62 மில்லியன் டன் நிலக்கரி கொண்டு செல்லப்படும் நிலையில் நாடு முழுவதும் 657 பயணிகள் ரயில் சேவைகளை தற்காலிகமாக நிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்மூலம் நிலக்கரி கொண்டு செல்லும் ரயில்களை வேகமாக இயக்க இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது.