கனடாவிற்கு படையெடுக்கும் இந்திய சாஃப்ட்வேர் இன்ஜினியர்கள் - அப்படியென்ன காரணம்?
வேலைக்காகக் கனடாவிற்குச் செல்பவர்களின் பட்டியலில் இந்தியா முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
டெக் நெட்வொர்க்
கனடாவிற்கு செல்லும் இந்தியத் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் சாஃப்ட்வேர் என்ஜினீயர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. இதுகுறித்து, வட அமெரிக்காவின்
தொழில்நுட்ப கவுன்சில்கள் மற்றும் கனடாவின் டெக் நெட்வொர்க் கூட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், ``ஏப்ரல் 2022 முதல் மார்ச் 2023 வரையில், 12 மாத காலப்பகுதியில்,
கொள்கை
15,000-க்கும் மேற்பட்ட இந்தியத் தொழில்நுட்ப வல்லுநர்கள் கனடாவுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். வேலைக்காகக் கனடாவிற்குச் செல்பவர்களின் பட்டியலில் இந்தியாவைத் தொடர்ந்து நைஜீரியா உள்ளது.
நைஜீரியாவில் இருந்து சுமார் 1,808 தொழில்நுட்ப பணியாளர்கள் கனடாவுக்கு சென்றுள்ளனர்.
இந்த தொழில்நுட்ப திறமைகளின் வருகை கனடாவின் தொழில்நுட்பத்துறையின் வளமான எதிர்காலத்தின் ஒரு நம்பிக்கையாகக் கருதப்படுகிறது.
இந்த நிகழ்வுக்கு கனடாவின் குடியேற்ற-நட்பு கொள்கைகளே காரணம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.