நாட்டையே உலுக்கிய ஹெலிகாப்டர் விபத்து: பிரதமர் மோடி அஞ்சலி
முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.
நீலகிரி மாவட்டம், குன்னூர் காட்டேரி மலைப்பாதையில் நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில், முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவர் மனைவி உட்பட மொத்தம் 13 பேர் உயிரிழந்தனர்.
மொத்தமாக பயணித்த 14 பேரில் 13 பேர் இறந்துவிட்ட நிலையில், ஒருவர் மட்டும் பெங்களூர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார்.
நாட்டையே சோகத்தில் ஆழ்த்திய இந்த சம்பவத்துக்கு இந்தியா மட்டுமல்லாமல் சர்வதேச நாடுகளின் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில் உயிரிழந்த 13 பேரின் உடல்கள் டெல்லி கொண்டு செல்லப்பட்டு, பாலம் விமானப்படை தளத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
பிரதமர் மோடி, பிபின் ராவத்தின் உடலுக்கு மலர்வளையம் வைத்தும், மதுலிக்கா மற்றும் ராணுவ அதிகாரிகள் உடல்கள் அடங்கிய பெட்டிகளுக்கு மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினார். பிறகு அவர்கள் உடல் வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
