இளவரசர் பிலிப் மறைவிற்கு இந்திய பிரதமர் மோடி இரங்கல்!

modi dead british philip
By Jon Apr 11, 2021 05:43 PM GMT
Report

இங்கிலாந்து இளவரசர் பிலிப் மறைவிற்கு பிரதமர் மோடி தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர், இங்கிலாந்து அரச குடும்ப வரலாற்றில் மிக நீண்ட காலம் இளவரசராக இருந்த பிலிப் நேற்று உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

இது குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், “இங்கிலாந்து நாட்டு மக்களுக்கும், இங்கிலாந்து அரச குடும்பத்தினருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இங்கிலாந்து ராணுவத்தில் மட்டுமல்லாமல் பல தன்னார்வ சேவைகளிலும் ஈடுபட்டுவந்த மறைந்த இளவரசர் பிலிப் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன்” என இரங்கல் செய்தியை பதிவிட்டுள்ளார்.