‘‘பயங்கரவாதம் இல்லாத நிலப்பகுதியை உருவாக்குவோம்’’ : பாக். பிரதமருக்கு இந்திய பிரதமர் வாழ்த்து

pakistan ShehbazSharif pakistanelection
By Irumporai Apr 12, 2022 02:37 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

புதிதாக பதவியேற்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷபாஷ் ஷெரீப் க்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதால் பிரதமர் பதவியில் இருந்து இம்ரான்கான் நீக்கப்பட்டார். ஆகவே பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷபாஷ் ஷெரீப் நேற்று பதவியேற்றுக்கொண்டார்.

இந்த நிலையில், பாகிஸ்தானின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஷபாஷ் ஷெரீப்பிற்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில்,பாகிஸ்தான் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஷபாஷ் ஷெரீப்பிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

பயங்கரவாதம் இல்லாத, அமைதியான, நிலைத்தன்மை கொண்ட நிலப்பகுதியை உருவாக்க  இந்தியா விரும்புகிறது. ஆகையால், நமது வளர்ச்சிக்கான சவால்களை கவனத்தில் கொண்டு நமது மக்களின் நல்வாழ்வு மற்றும் வளமான வளர்ச்சியை உறுதிபடுத்துவோம் என தெரிவித்துள்ளார்.