பாராலிம்பிக் தொடர்: பதக்கங்களை அள்ளிய இந்திய வீரர்கள் - குவியும் பாராட்டு
பாராலிம்பிக் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய வீரர்கள் 3 போட்டிகளில் பதக்கங்களை தட்டிச் சென்றனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் நேற்று நடைபெற்ற ஆடவர் தனிநபர் வில்வித்தை போட்டியில் தென்கொரிய வீரர் கிம் மிந் சூவை 6-5 என்ற கணக்கில் வென்று இந்திய வீரர் ஹர்வீந்தர் சிங் வெண்கலப்பதகம் வென்றார்.
இதேபோல் ஆடவர் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் பிரவீன்குமார் 2.07 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளி பதக்கத்தைக் கைப்பற்றினார். இதேபோல் மகளிர் துப்பாக்கிச் சுடுதல் 50 மீட்டர் ரைபிள் பிரிவில் இந்திய வீராங்கனை அவனி லெகாரா வெண்கலம் வென்றுள்ளார்.
இவர் ஏற்கனவே மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம் இந்தியா 2 தங்கம், 6 வெள்ளி, 5 வெண்கல பதக்கங்களுடன் புள்ளிப்பட்டியலில் 37வது இடத்தில் உள்ளது.
உண்மையாக நேசிக்கும் ரிஷப ராசிக்காரர்களின் மறுபக்கம் தெரியுமா? இவர்களை பிரிந்தால் இழப்பு உங்களுக்குத்தான்! Manithan