கிரிக்கெட் மைதானத்தில் ஆரவாரத்துடன் வெற்றியை கொண்டாடிய இந்திய வீரர்கள் - வைரலாகும் வீடியோ
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது போட்டியில் வெற்றி பெற்று ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றியது.
இந்திய அணி வெற்றி
மான்செஸ்டரில் நடந்த 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 45. 5 ஓவர்களில் 259 ரன்னில் ஆல்அவுட் ஆனது. பின்னர் விளையாடிய இந்திய அணி 42.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 261 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ரீஸ் டாப்லே 3 விக்கெட்டும், கார்சே, ஓவர்டன் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்கள். இந்த வெற்றி மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் போட்டியில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. இந்த தொடரில் 100 ரன்கள் எடுத்து 6 விக்கெட் கைப்பற்றிய ஹர்திக் பாண்ட்யா தொடர் நாயகன் விருதை பெற்றார்.
வைரலாகும் வீடியோ
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் இது குறித்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், கிரிக்கெட் மைதானத்தில் இந்திய வீரர்கள் வெற்றியை மகிழ்விக்கும் வகையில், உற்சாகமாக, ஆரவாரத்துடன் ஒருவர் மீது ஒருவர் நீர் தெளித்து வெற்றியை கொண்டாடியுள்ளனர். இதைப் பார்த்த நெட்டிசன்கள் மகிழ்ச்சியில் வாழ்த்து தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
WINNERS ??? pic.twitter.com/iYu3JSsI5j
— Sky Sports Cricket (@SkyCricket) July 17, 2022