மோதி பார்க்கலாமா? - பயிற்சியை தொடங்கிய இந்திய வீரர்கள்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தயாராகும் வகையில் இந்திய அணி வீரர்கள் பயிற்சியை தொடங்கியுள்ளனர்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி வரும் ஜூன் 18 ஆம் தேதி இங்கிலாந்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

இதற்காக இந்திய அணி வீரர்கள் கடந்த வாரம் தனி விமானம் மூலம் சவுத்தாம்டன் நகருக்கு வந்தனர். கொரோனா பாதுகாப்பு விதிமுறையின் கீழ் தங்களை 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்ட அவர்களுக்கு நடந்த பரிசோதனையில் யாருக்கும் கொரோனா இல்லை என உறுதியானது.

இதனையடுத்து இந்திய அணி வீரர்கள் சவுத்தாம்டன் மைதானத்தில் தங்களது பயிற்சியை தொடங்கினர்.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்