ஒலிம்பிக் துப்பாக்கி சூடு போட்டி: இந்திய வீரர்கள் அதிர்ச்சி தோல்வி

Tokyo Olympics Aishwary Tomar Sanjeev Rajput 50m rifle 3P final
By Petchi Avudaiappan Aug 02, 2021 03:45 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in விளையாட்டு
Report

டோக்கியோ ஒலிம்பிக்கில் 50மீ 3 நிலை துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் ஐஸ்வரி பிரதாப் சிங் மற்றும் சஞ்சீவ் ராஜ்புட் இருவரும் தோல்வி அடைந்து வெளியேறியுள்ளனர்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் தொடரில் இன்று 50மீ 3 பொஷிஷன் துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் ஐஸ்வரி பிரதாப் சிங் மற்றும் சஞ்சீவ் ராஜ்புட் இருவரும் பங்கேற்றனர். 

இதில் மொத்தம் 3 நிலைகளில் துப்பாக்கி மூலம் சுட வேண்டும். 50 மீ தூர இலக்கை நின்றபடி சுட வேண்டும், பின்னர் முட்டி போட்டு சுட வேண்டும்.கடைசியாக படுத்தபடி சுட வேண்டும்.

இந்த போட்டியில் பிரதாப் சிங் மூன்று சுற்றுகள் முடிவில் 1200க்கு 1167 புள்ளிகள் பெற்றார். இதன் மூலம் 21வது இடத்திற்கு பின்னடைவை சந்தித்தார். சஞ்சீவ் ராஜ்புட் 1157 புள்ளிகள் பெற்றார். இதன் மூலம் 32வது இடத்திற்கு பின்னடைவை சந்தித்தார். இரண்டு பேருமே எட்டு இடங்களுக்குள் வராத நிலையில் 50மீ துப்பாக்கி 3 நிலை துப்பாக்கி சுடுதலில் இருந்து இருவரும் தோல்வி அடைந்து வெளியேறி உள்ளனர்.