துப்பாக்கி சுடுதலில் ஏமாற்றிய இந்திய வீரர்கள்
டோக்கியோ ஒலிம்பிக்கில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கிச்சுடுதல் தகுதிச்சுற்று போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் தோல்வி அடைந்து ஏமாற்றம் அளித்தனர்.
இன்று நடைபெற்ற பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கிச்சுடுதல் தகுதிச்சுற்று போட்டியில் இந்திய வீராங்கனைகள் யஷாஸ்வினி தேஸ்வால், மானு பாகெர் பங்கேற்றனர். இப்போட்டியில் முதல் 8 இடங்களுக்குள் வரும் வீராங்கனைகள் இறுதி சுற்றுக்கு தகுதி பெறுவர். ஆனால் 6 சுற்றுகளை கொண்ட போட்டியில் யஷ்ஸ்வினி தேஸ்வால் முறையே 94,98,94,97,96 என மொத்தம் 574 புள்ளிகளை பெற்று தரவரிசையில் 13-வது இடமும், மனு பாகெர் முறையே 98,95,94,95,98,95 என மொத்தம் 575 புள்ளிகளை பெற்று தரவரிசையில் 12வது இடம் பிடித்தார். இதன் மூலம் இருவரும் இறுதி போட்டி செல்லும் வாய்ப்பை இழந்தனர்.
இதேபோல் 10 மீட்டர்ஏர் ரைபிள் துப்பாக்கிச்சுடுதல் பிரிவின் ஆண்கள் தகுதி சுற்று போட்டியில் இந்திய வீரர்கள் தீபக்குமார், திவ்யான்ஷ் சிங்
பன்வார் பங்கேற்றனர். இதில் தீபக் குமார் முறையே 102.9, 103.8, 103.7, 105.2, 103.8, 105.3 என மொத்தம் 624.7 புள்ளிகளை பெற்று 26 வது இடத்தையும், திவ்யான்ஷ் சிங் பன்வார் முறையே 102.7, 103.7, 103.6, 104.6,104.6, 103.6 என மொத்தம் 622.8 புள்ளிகளை பெற்று 32வது இடத்தையும் பிடித்து போட்டியில் இருந்து வெளியேறினர்.