சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு : இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு ஜெயில் தண்டனை

america sexualabuse indianoriginman
By Petchi Avudaiappan Jan 31, 2022 04:54 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in உலகம்
Report

அமெரிக்காவில் சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த  இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 மாதம் சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்  அமெரிக்காவின் மின்னியாபோலிஸ் பகுதியில் வசித்து வரும் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட நீரஜ் சோப்ரா என்பவர்  போஸ்டன் நகரில் இருந்து மின்னியாபோலிஸ் நகருக்கு விமானத்தில் சென்றுள்ளார். 

அப்போது விமானத்தில் அவரது இருக்கைக்கு அருகில் 16 வயது சிறுவன் பயணித்துள்ளான். தொடர்ந்து தனது பேக்கில் இருந்த போர்வை ஒன்றை எடுத்த நீரஜ், அதனை தனது மடியில் விரித்த நிலையில் போர்வையில் சில பகுதிகள் சிறுவன் மீதும் இருந்துள்ளது. 

இதனையடுத்து சிறுவனின் அந்தரங்க பகுதிகளை தொட்டு அவனுக்கு நீரஜ் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுவன் நீரஜிடம் எச்சரிக்கை விடுத்தும் அவர் விடுவதாக இல்லை.

இதனிடையே  சிறுவன் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரையடுத்து நீரஜிடம் 3 நாட்கள் விசாரணை நடத்தப்பட்டதில் அவர் உண்மையை ஒப்புக்கொண்டார். இந்நிலையில் நீரஜ் சோப்ராவுக்கு 15 மாதம் சிறைத்தண்டனை விதித்து மின்னியாபோலிஸ் மாவட்ட நீதிபதி நான்சி இ.பிராசல் உத்தரவிட்டுள்ளார்.