வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்
வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஈரான்- இஸ்ரேல், அமெரிக்கா போரின் விளைவாக ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளது.
இதனால் சர்வதேச அளவில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக்கு கடும் தட்டுப்பாடு உருவாகியுள்ளது.
இந்தியாவில் LPG சிலிண்டருக்கு தட்டுப்பாடு என தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தது, போதிய அளவில் இருப்பு இருப்பதாக நிறுவனங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் அறிவித்துள்ளது.
வீட்டு உபயோக சிலிண்டர் மற்றும மருத்துவமனை போன்ற அவசர தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கும் வண்ணம் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனனே வீட்டு உபயோக சிலிண்டரின் விலை 60 ரூபாய் அதிகரித்த நிலையில், முன்பதிவு செய்யும் காலமும் 21 நாட்களாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
