‘வந்தே மாதரம்’ - ஆப்கானில் இருந்து திரும்பிய இந்தியர்கள் நெகிழ்ச்சி

taliban indiansinafghanistan
By Petchi Avudaiappan Aug 17, 2021 01:47 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

ஆப்கானிஸ்தானிலிருந்து அழைத்துவரப்பட்ட இந்தியர்கள் சொந்தநாடு வந்தடைந்த மகிழ்ச்சியில் 'வந்தே மாதரம்' என முழங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் திரும்ப பெறப்பட்ட நிலையில் அங்கு தாலிபான் அமைப்பினர் ஆட்சி அதிகாரத்தைக் சுமார் 20 ஆண்டுகளுக்கு பின்னர் கைப்பற்றியுள்ளனர்.

இதனால் அங்கு நிலைமை கைமீறி உள்ளது. ஆப்கானில் வாழும் தங்கள் நாட்டு மக்களை மீட்க இந்தியா உட்பட உலக நாடுகள் அனைத்தும் பெரும் முயற்சியில் இறங்கியுள்ளன.

முதற்கட்டமாக ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து 129 இந்திய பயணிகள் தாயகம் திரும்பிய நிலையில், இன்று மேலும் 120 பயணிகள் இந்தியா திரும்பினர். விமான நிலையத்திலிருந்து பேருந்து மூலம் வெளியே அழைத்து வரப்பட்டபோது சொந்த நாடு திரும்பிய நெகிழ்ச்சியில் 'வந்தே மாதரம்', 'பாரத் மாதாகி ஜே' என அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். இதன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.